மதுராந்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முதல்வர் விஜய் பிரசாரம் தொடக்கம்!வண்டலூர் பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! தாம்பரம் காவல்துறை விளக்கம்தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

கதை விவாதத்தில் அட்லி: நாயகன் யார் தெரியுமா?

இயக்குநர் அட்லியின் 6வது படத்தின் நாயகன் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது

Published On :

இயக்குநர் அட்லியின் 6வது படத்தின் நாயகன் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.

ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் நேர்காணலில் கூறியிருந்தார்.

தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜவான் வெற்றிக்குப் பின் அட்லி தன் சம்பளத்தை ரூ.60 கோடியாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் அட்லி கதை விவாத்ததில் இருக்கும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. விஜய்யின் கடைசி படமான விஜய் 69 படத்தினை அட்லி இயக்குகிறாரா அல்லது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உடனா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் இணையத்தில் அட்லியின் 6வது படம் குறித்து பேச்சுகள் டிரெண்டாகிவருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.