இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் பக்கத்தில் விரைவில் கோட் படத்தின் அப்டேட்டினை வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதால் விரைவில் படக்குழு அங்கு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கோட் படத்தின் அப்டேட்டினை தகாத வார்த்தைகளால் கேட்ட ரசிகரிடம் கிண்டலாக பதிலளித்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில், “விரைவில் கோட் படத்தின் அப்டேட் வரும். அது மிகவும் தரமான அப்டேட்டாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு நேற்றிரவு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் திருட்டு எப்படி நடந்தது? சிந்திக்க வைக்கும் சேரனின் பதிவு!

கைவிடப்படும் சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம்?

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் என்ன ஆனது?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


