திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

புத்தகம் பரிசளித்த ரஜினி

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'தர்மன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

Published On :

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'தர்மன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தனக்குப் பரிசளித்த 'லிவிங் வித் த ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' என்ற ஆன்மிகப் புத்தகம் தனது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ' 'இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?' என்று ரஜினி கேட்டார். 'இல்லை' என்றேன். இரண்டு நாள்களுக்குப் பிறகு, அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கி வந்து எனக்குப் பரிசளித்தார். கடந்த சில வாரங்களாக அதை ஆர்வத்துடன் படித்து வருகிறேன். 'புத்தகத்தைப் பற்றி நான் உன்னிடம் கேள்வி கேட்பேன்' என்றும் அவர் சிரித்தபடி கூறினார்.

அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என்னைச் சிந்திக்க வைக்கின்றன. அந்தப் புத்தகத்தில் இருந்து மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக்கொண்டேன். நம்மில் பலருக்கு ஏன் தனிமை உணர்வு ஏற்படுகிறது என்பதற்கான பதிலை இந்தப் புத்தகம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. நாம் ஒரே இரவில் நம்மைத் தொலைத்துவிட்டோம் என்பதற்காக அல்ல, மாறாக வேறு யாரோ ஒருவராக மாறுவதற்காகப் பல வருடங்களைச் செலவழித்திருக்கிறோம் என்பதால்தான்.

அதனால் தான் அமைதி கூட இவ்வளவு சத்தமாக உணரப்படுகிறது. ஏனென்றால், எந்தவித கவனச் சிதறல்களும் இல்லாதபோது, இறுதியில் நம்மை நாமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் வளர்ச்சி என்பது நாம் போலியாக உருவாக்கிக்கொண்ட அடையாளங்களை விட்டுவிடுவதில்தான் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.