மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தர்மன் படப்பிடிப்பில் ராஷி கண்ணாவுக்கு சூப்பர்ஸ்டார் அளித்த பரிசு! என்ன தெரியுமா?

நடிகை ராஷி கண்ணாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த பரிசு குறித்து...

raashikhanna - rajinikanth

நடிகை ராஷி கண்ணா - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... - கோப்புப் படம்

Published On :

நடிகை ராஷி கண்ணாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகம் சார்ந்த புத்தகத்தைப் பரிசளித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் “தர்மன்”. இப்படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்ரன், யோகிபாபு மற்றும் ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தர்மன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷி கண்ணாவுக்கு மறைந்த யோகா குரு சுவாமி ராமா எழுதிய “லிவ்விங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்” எனும் ஆன்மீகம் சார்ந்த புத்தகத்தை பரிசளித்துள்ளார்.

இதுபற்றி, நடிகை ராஷி கண்ணா வெளியிட்டுள்ள விடியோவில்,

“நான் தர்மன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு உரையாடலில் நாங்கள் இருவரும் ஆன்மீகம் குறித்து பேசினோம். அப்போது, இந்தப் புத்தகத்தைப் படித்துள்ளீர்களா என அவர் கேட்டார். நான் இல்லை என்றேன். இருநாள்கள் கழித்து அவர் இந்தப் புத்தகத்தின் பிரதியை எனக்குப் பரிசளித்தார்.

இந்தப் புத்தகத்தை நான் படித்துள்ளேனா என்பதை சோதிப்பேன் என அவர் கூறியதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக நான் தொடர்ந்து இதைப் படித்து வருகிறேன். இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது." எனக் கூறியுள்ளார்.

இத்துடன், அந்தப் பதிவில், நீங்கள் யாராகவோ வேடமிட்டு நடித்துக்கொண்டிருக்கிறீர்களோ, அந்தப் போலியான பிம்பங்களைக் கைவிடுவதுதான் வளர்ச்சி என அந்தப் புத்தகத்தில் உள்ள வரிகளையும் ராஷி கண்ணா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஆன்மீகம் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிகை ராஷி கண்ணாவுக்கு பரிசளித்துள்ள இந்தப் புத்தகம் இணையவாசிகள் இடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A gift given by Superstar Rajinikanth to actress Raashii Khanna has become a topic of discussion online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.