மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

டயங்கரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு! உற்சாகத்தில் விஜே சித்து ரசிகர்கள்!

விஜே சித்துவின் டயங்கரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து...

News image

விஜே சித்துவின் டயங்கரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு... - youtube

Updated On :31 ஜூலை 2026, 6:36 pm IST

விஜே சித்துவின் “டயங்கரம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “டயங்கரம்”. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டா பிரபலம் மல்லேஷ் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் “டயங்கரம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மாலை படக்குழு சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

யூடியூப் பிரபலங்களில் முதன்மையானவராக அறியப்படும் விஜே சித்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியான நாள் முதல் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

filming of the movie "Dayangaram," directed by and starring VJ Siddhu as the lead, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.