
'சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30க்கு வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "புறநானூறு படத்திற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி நம் இதயத்திற்கு நெருக்கமானது. நாங்கள் சிறந்ததைத் தர உழைக்கிறோம். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி." எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு அதிக நாள்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.