குக் வித் கோமாளியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்... பிற போட்டியாளர்கள் யார்யார்?

குக் வித் கோமாளியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வசந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்... பிற போட்டியாளர்கள் யார்யார்?

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனிடையே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகியதால், பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ப்ரொடக்‌ஷென் நிறுவனம் 5-வது சீசனை தயாரிக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 5-ன் புதிய முன்னோட்டக் காட்சி முன்னதாக வெளியானது. இந்த புதிய சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக பங்கேற்கவுள்ளது உறுதியானது.

குக் வித் கோமாளியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்... பிற போட்டியாளர்கள் யார்யார்?
குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இதில், கடந்த சீசன்களில் கோமாளிகளாகப் பங்கேற்ற, புகழ், சுனிதா, குரேஷி, மோனிஷா உள்ளிட்டோரும், புதிதாக, விஜய் டிவி புகழ் ராமர், பிக்பாஸ் புகழ் கூல் சுரேஷ், காத்துக் கருப்பு கலை, சமூகவலைதளத்தில் நாற்காலிகள் விற்று பிரபலமான சிறுவன் சோஃபா ரசூல் ஆகியோர் இந்த சீசனில் புதிய கோமாளியாக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி 5-வது சீசனில் யூடியூபர் இர்ஃபான், நடிகர் விடிவி கனேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பாகத்தில் நடிக்கும், வசந்த், நடிகை திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது

குக் வித் கோமாளி 5வது சீசனில் பங்கேற்பவரிகளின் அதிகாரபூர்வ தகவல் அடுத்தடுத்து வரும் முன்னோட்டக் காட்சிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com