விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் விரைவில் பார்க்கிங் 2 ஆம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
Published on

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் (2018) படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரினை பெற்றுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடித்த படம் 'பார்க்கிங்' படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பார்க்கிங் திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியானது.

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!
சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

வாடகை வீட்டில் குடியிருக்கும் இருவருக்குள் நடக்கும் பார்க்கிங் பிரச்னை எந்த அளவுக்கு செல்கிறது என்பதை அவர்களது ஈகோவை கருப்பொருளாக வைத்து த்ரில்லர் கதையாக படமாக்கியிருப்பார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!
கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

இதன் அபார வெற்றியினால் இதன் இரண்டாம் பாகத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாககுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com