சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யுத் ஜம்வால்!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்து வருவதாகத் தகவல்.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யுத் ஜம்வால்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம்  வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டுள்ளனர். இதன் பெயர் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

தற்போது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யுத் ஜம்வால்!
கோட் டீசர் எப்போது?

இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கி துப்பாக்கி படத்தில் வித்யுத் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அஞ்சான் படத்திலும் கவனிக்கப்பட்டார். அவர், மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளது எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com