மதுராந்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முதல்வர் விஜய் பிரசாரம் தொடக்கம்!வண்டலூர் பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! தாம்பரம் காவல்துறை விளக்கம்தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

கோட் டீசர் எப்போது?

நடிகர் விஜய்யின் கோட் படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலைப் பாட உள்ளதாகவும் நடிகை த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.