
திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம், வருகிற மே 5 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படமான ‘தி பாய்ஸ்’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் மே 7-ல் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார், ஷாரா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நடிகை ஹன்சிகா பிரதான வேடத்தில் நடித்த கார்டியன் திரைப்படம் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டியர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்த ஹிந்தி மொழி திரைப்படமான சைத்தான் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் மே 4-ல் வெளியாகிறது.
சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய ஹிந்தி மொழி இணையத் தொடரான ஹீராமண்டி தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.