8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Published On :3 மே 2024, 3:45 pm IST

வெயில், அங்காடித்தெரு, அநீதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன். இவருக்கு வெயில் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

சமீபத்தில் இவரது இயக்கத்தில், நடித்த அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், வசந்த பாலன் புதிய இணையத் தொடரொன்றை இயக்குகிறார். இத்தொடரில் நடிகர் கிஷோர் பிரதான வேடத்தில் நடிக்கிறார். மேலும் பரத் நிவாஸ், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இந்த இணையத் தொடருக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். இத்தொடர் வரும் மே 17 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தற்போது, தலைமைச் செயலகம்' இணையத் தொடரின் முதல்பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.