‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தில் நயன் தாரா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்கிறார். டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?
டேவிட் வார்னர் 70% இந்தியர்!

நடிகர் யஷ்ஷும் இணை தயாரிப்பாளராக களமிறங்குகிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கயுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கீது கோகன்தாஸ் லையர்ஸ் டைஸ், மூத்தோன் படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது, தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் டின்னு என்கிற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?
கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

இந்தப் படத்தில் கரீனா கபூர் நடிக்கவிருந்தது கால்சீட் பிரச்னைகளால் அவர் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக நடிகை நயன்தாராவைச் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீது மோகந்தாஸின் வலூவான பெண் கதாபாத்திரம் நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com