/

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பு படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2024, 6:14 pm IST

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வருகிறது தக் லைஃப் திரைப்படம். ஏஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சிம்பு இப்படத்தில் இணைந்தார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது.

இதில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தக் லைஃப் திரைப்படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

இதனை உறுதிப்படுத்து விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிம்பு, வையாபுரி மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் புதிய கிளிம்ஸ் விடியோ மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.