நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

அருவி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.
நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

தமிழ் சின்னத்திரை தொடர்களில் மக்களிடம் அதிகம் வரவேற்கப்பட்ட தொடர்களாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் உள்ளன. அதேபோல், இத்தொடர்கள்தான் டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

சமீபத்தில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்பே வா, பிரியமான தோழி உள்ளிட்ட தொடர்கள் நிறைவடைந்த நிலையில், அருவி தொடரும் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.

அருவி தொடர் கன்னட தொடரான கஸ்தூரி நிவேசா தொடரின் கதையை மையமாகக் கொண்டு மறுஉருவாக்கம் செய்யப்பட்ட தொடராகும். இத்தொடரில் நடிகை ஜோவிதா பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!
பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

மேலும் நடிகை அம்பிகா, கார்த்திக் வாசு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் இந்த தொடரில் நடிக்கின்றனர். இத்தொடர் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அருவி தொடரின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வரும் மே 11 ஆம் தேதியுடன் இத்தொடர் நிறைவடைகிறது.

இந்த நிலையில், இதிகாசத் தொடரான இராமாயணம் தொடர் வரும் மே 13 முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!
சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

அருவி தொடர் நிறைவடையவுள்ளதால், பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மலர் தொடர், நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

அதேபோல், மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் தொடர் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com