சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி
சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்
Published on
Updated on
1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நளதமயந்தி தொடரிலிருந்து நடிகை பிரியங்கா நல்காரி விலகியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிப்பதற்காக ஏற்கெனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சீதா ராமன் தொடரிலிருந்து பாதியில் விலகியிருந்தார். தற்போது நளதயமந்தி தொடரிலிருந்து விலகியதற்காக காரணம் குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நளதயமந்தி தொடரிலிருந்து தனாக விலக வில்லை என பிரியங்கா நல்காரி விளக்கம் அளித்துள்ளார்.

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்
நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை கற்பனை செய்துகொள்ள வேண்டாம். வீணாக வந்தந்திகளைப் பரப்பாதீர்கள்.

சீரியலில் இருந்து நானாக விலகவில்லை. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், திடீரென இது நடந்தது. அதற்கு காரணம் தேவை. உங்கள் அனைவருக்கும் விரைவில் அது தெரியவரும் எனப் பதிவிட்டுள்ளார்.

பிரியங்காவின் இந்த பதிவு மூலம் அவர் தொடரிலிருந்து விலகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. நளதயமந்தி தயாரிப்பு நிறுவனம் அல்லது இயக்குநரிடமிருந்து இது தொடர்பாக விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நள தயமந்தி தொடரில் பிரியங்கா நல்காரியின் கதாபாத்திரம் விபத்தில் இறந்ததைப் போலவும், அவருக்கு பதிலாக அவரின் தங்கை என புதிய கதாபாத்திரம் அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிகிறது.

பிரியங்காவின் தங்கை பாத்திரத்தில் நடிகை நடிகை ஸ்ரீநிதி நடிக்கவுள்ளார். அவர் இனி நளதயமந்தி தொடரின் நாயகியாகவும் மாறவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com