

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகுமென சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தன் 44-வது படத்தில் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்தது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இந்நிலையில், இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தின் மூலம் ஜோஜு ஜார்ஜ் தமிழில் அறிமுகமாகி கவனம் பெற்றார். தற்போது, இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.