

சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து, டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமடைந்தார். தற்போது, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவான ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படம், கடந்த வெள்ளிக்கிழமை எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளதால் பெரிய வெற்றிக்கு வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
ஆனால், இப்படம் முதல்நாள் ரூ.4 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்துவரும் நடிகரான கவின், 4-வது திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய தொகையை முதல்நாள் வசூலாக ஈட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.