சர்ச்சைக்குள்ளாகும் நிகிலா விமலின் கருத்து! அப்படி என்ன கூறினார்?

நடிகை நிகிலா விமல் சினிமாவில் பெண் கதாபாத்திரங்கள் குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
நிகிலா விமல்
நிகிலா விமல்படம்: எக்ஸ்

மலையாள நடிகை நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், கிடாரி, போர்தொழில் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான போர் தொழில் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரண்டு மலையாளப் படங்கள், ஒரு தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நிகிலா விமல் பேசியதாவது:

நிகிலா விமல்
விஜய் வழங்கும் கல்வி விருது விழா: ஏற்பாடுகள் தீவிரம்

கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆவேஷம், மஞ்ஞுமெல் பாய்ஸ் போன்ற திரைப்படங்களுக்கு பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை. தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை வைத்தால் கதையின் போக்கு கெட்டுவிடும். தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை வைப்பதற்கு பதிலாக அதை வைக்காமல் இருப்பதே நல்லது எனக் கூறியுள்ளார்.

இதனால் சமூக வலைதளங்களில் நிகிலா விமல் கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

நிகிலா விமல்
'எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணமில்லை’: சைந்தவி
நிகிலா விமலின் புதிய படம்
நிகிலா விமலின் புதிய படம்

ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கதையை நகர்த்த உதவாக கதாபாத்திரங்களை படத்தில் சேர்ப்பதில்லை. அது கதையின் போக்கினை மாற்றிவிடும். அதனால் கதைக்கு தேவையானவர்களை மட்டுமே கவனம் செலுத்துகிறேன எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com