ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

நடிகர் ஃபஹத் ஃபாசில் - இயக்குநர் ஜித்து ஜோசப் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது.
ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாள சினிமாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியளவில் கவனம் பெற்ற நடிகராக இருக்கிறார். ஃபஹத் நடிக்கும் ஒவ்வொரு படத்தில் அவரது நடிப்பு குறித்த விவாதங்களே நிகழும்.

சமீபத்தில் வெளியான, ஃபஹத்தின் ஆவேஷம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றி பெற்றதுடன் ஃபஹத்தின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்றது.

தற்போது, ‘த்ரிஷ்யம்’ படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் ஜித்து மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருப்பவர். நடிகர் மோகன்லாலை வைத்து இறுதியாக இயக்கிய ‘நேரு’ திரைப்படம் விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றது.

முதல்முறை ஃபஹத் - ஜித்து கூட்டணியில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!
'எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணமில்லை’: சைந்தவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com