விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சிறகடிக்க ஆசை தொடர் விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இத்தொடர் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் கவர்ந்துள்ளது.
இத்தொடரில், பிரதான வேடத்தில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா நடிக்கிறார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ்.குமரன் இந்தத் தொடரை இயக்குகிறார்.
இத்தொடரில் மனோஜ் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா, பெண் வேடமிட்டு சிறகடிக்க ஆசை தொடரில் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் ஸ்ரீதேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை தொடரில் இது தொடர்பான காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக இருந்ததாக ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீதேவா துணிவு படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தார். ஆதலினால் காதல் செய்வீர் என்ற வெப் தொடரிலும் இவர் நடித்திருந்தார்.