
சன் தொலைக்காட்சியில் கடந்த 2022 பிப்ரவரி 7ஆம் தேதிமுதல் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. பெண் சுந்தந்திரம், கலாசாரம் குறித்து பல சர்ச்சையன கருத்துகளும் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டது.
ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் உள்ள ஆண்களை திருமணம் செய்துகொண்டு செல்லும் பெண்களை மையப்படுத்தியும், அந்த வீட்டில் பிறந்த பெண்களை மையப்படுத்தியும் எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரில் நடிகைகள் மதுமிதா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி, சத்யப்பிரியா, காயத்ரி கிருஷ்ணன், சத்யா தேவராஜன், நடிகர்கள் கமலேஷ், சபரி பிரசாந்த், விபூ ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
எதிர்நீச்சல் தொடர் எப்போதும் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதல் 5 இடங்களில் பிடித்து வருகிறது. இத்தொடர் இளைய தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் சக நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நடிகை மதுமிதா வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.