எதிர்நீச்சல் -2 தொடர் நகர்ப்புறங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னணியில் இருந்த கயல், மருமகள், அன்னம் ஆகியத் தொடர்களை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரிலும் முதல் பாகத்தில் நடித்த நடிகைகளே முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு திருமணமாகிச் செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இத்தொடரில் நடிகை பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் -2 தொடரில்... - படம் - இன்ஸ்டாகிராம்
டிஆர்பிக்காக புதிய பாத்திரங்களை எதிர்நீச்சல் - 2 தொடர் அறிமுகம் செய்து வந்தாலும், கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால், தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
எனினும் கடந்த சில மாதங்களாக டிஆர்பி புள்ளிப் பட்டியலில் எதிர்நீச்சல் தொடரைக் காட்டிலும் கயல், மூன்று முடிச்சு, சிங்கப் பெண்ணே போன்ற தொடர்கள் முதன்மை இடங்களில் நீடித்து வந்தன.
இந்நிலையில் நகர்ப்புறங்களில் அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் தொடராக எதிர்நீச்சல் -2 உள்ளது. நகர்ப்புறங்களுக்கான டிஆர்பி புள்ளிப் பட்டியலில் அதிகபட்சமாக 4.9 புள்ளிகளை எதிர்நீச்சல் - 2 தொடர் பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் தொடர் 4.7 புள்ளிகளையும், கேப்ரியல்லா நாயகியாக நடிக்கும் மருமகள் தொடர் 4.6 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
4வது இடத்தில் அயலி புகழ், அபி நட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடர் உள்ளது. இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 4.4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
எதிநீச்சல் -2 தொடர் மீண்டும் முதன்மை இடம் பிடித்துள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
Ethirneechal 2 Serial Urban raings beated kayal, marumagal serials
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அகம் மகிழும் என் அல்லிக்குளம்... கவனம் பெறும் தீ பாடல்!

1000 நாள்களைக் கடந்த சிறகடிக்க ஆசை தொடர்!

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



