தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...

punitha serial

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு! - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான விடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணான கண்ணே தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். இந்தத் தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புனிதா என்ற புதிய தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சுரேந்தர் நடித்து வருகிறார்.

புனிதா தொடர் கடந்த 2024 அக்டோபரில் தொடங்கப்பட்ட நிலையில், 450 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தாய் மற்றும் வளர்ப்பு மகள் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புனிதா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இந்தத் தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இது தொடர்பான விடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர் குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மணமகளே வா, ஆடுகளம் தொடர்கள் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புனிதா தொடரும் முடியவடையவுள்ளது.

Summary

The filming of the series Punitha, currently airing on Sun TV, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.