பாடகி தீயின் புதிய பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ தமிழ் சினிமாவின் திறமையான பாடகர்களின் வரிசையில் உள்ளார். தீ பாடிய, ‘எஞ்சாமி’ பாடல் உலகளவில் கவனம் பெற்றது. ஆல்பம் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் பாடி வருகிறார். தனித்துவமான குரல் என்பதால் தீ பாடும் பாணியும் ரசிக்க வைக்கிறது.
தற்போது, ’வாரி வரி வரி’ என்கிற புதிய ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்பாடலை விவேக் எழுத, சோமிதரன் இயக்கியுள்ளார்.
காதலின் விருப்பத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் இப்பாடலில், “உன்னைக் காதலிச்சேன், அகம் மகிழும் என் அல்லிக்குளம்! தினம் நீ சிரிச்சா என் நெஞ்சுக்குள்ள ஒரு மின்னல் விழும்" வரிகள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

கட்டழகி - இதயம் முரளி புதிய பாடல்!

கட்டழகி - அதர்வாவின் இதயம் முரளி புதிய பாடல்!

கவனம் பெறும் தனுஷ் - 55 தோற்றம்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


