மறைந்த பாடகி ஆஷா போஸ்லே குறித்து இளையராஜா பேசியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்திய திரையிசையில் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்திய பாடகி என்பதால் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”இந்திய திரைத்துறையில் பெரும்புகழ் பெற்றிருந்த சகோதரி ஆஷா போஸ்லே இன்று காலமானார். என் மீது எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பதையும் ஒரு பின்னணி பாடகியாக என் மீது மரியாதை வைத்திருந்ததையும் மறக்கவே முடியாது. என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர். அவரின் திறமைக்கு அளவே இல்லை.
வேறு எந்தக் குரலுகளுடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர். எப்போது சென்னை வந்தாலும் என்னைச் சந்திப்பார். மறக்கவே முடியாத குரல். சகோதரி ஆஷா போஸ்லேவின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இளையராஜா, ஆஷா போஸ்லேவை, “செண்பகமே செண்பகமே” பாடல் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
ilaiyaraaja shares his memories with late asha bhosle
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
விடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை


