
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.
வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? உடனடியாக கொல்லப்படுகிறார்கள். ஒரு சிறிய கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்த ‘ஸ்குவிட் கேம்’ தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது.
இந்த நிலையில், இத்தொடரின் இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.