புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

இந்தியன் - 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

News image
Updated On :16 மே 2024, 9:40 am

DIN


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.

இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை ஜூன் மாதம் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால், இப்படத்தை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் - 2 கிளைமேக்ஸில் இந்தியன் - 3 பாகத்திற்கான டிரைலர் இடம்பெற உள்ளதாம்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின், இந்தியன் - 3 திட்டத்தை இயக்குநர் ஷங்கர் வைத்திருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.