
மும்பையில் வீசிய பலத்த காற்றால் காட்கோபர் பகுதியில் விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது. 74 பேர் காயமுற்றுள்ளனர்.
திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் 100 அடி உயரமுள்ள விளம்பர பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்தது. பெட்ரோல் நிலையத்தில் சுமார் 150 வாகனங்கள் மழைக்காக ஒதுங்கியிருந்தன. 250 டன் எடை கொண்ட பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்தது.
இதில் நடிகர் கார்த்திக் ஆர்யனின் உறவினரான மனோஜ் சன்சோரியா (60), அவரது மனைவி அனிதா (59) மத்திய பிரதேசத்திலுள்ள அவர்களது வீட்டுக்கு சென்றுள்ளனர். போகும் வழியில் காட்கோபர் பெட்ரோல் நிலையத்தில் காருக்கு எரிபொருளை நிரப்பச் சென்றுள்ளனர். அப்போது வண்டியின் மீது விளம்பர பலகை விழுந்து இறந்துவிட்டனர்.
அமெரிக்காவிலுள்ள தனது மகனைப் (யாஷ்) பார்க்க விசா சார்ந்த நடைமுறைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தினால் அவர்களது குடும்பத்தையும் அன்புக்குரியவர்களையும் விட்டு பிரிந்து விட்டனர்.
நடிகர் கார்த்திக் ஆர்யன் இவர்களது இறுதிச் சடங்கில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் ஆர்யன் 2011 முதல் ஹிந்தி சினிமாக்களில் நடித்து வருகிறார். தற்போது சந்து சாம்பியன் எனும் பயோப்பிக்கில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஜூனில் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.