நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியன் - 3 உறுதி!

இந்தியன் - 3 திரைப்படம் உறுதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 மே 2024, 2:24 pm

DIN


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.

இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை ஜூன் மாதம் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால், இப்படத்தை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் இருவரும் சென்னை, பெங்களூருவுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளர்களுடன் இணைந்து பேசியுள்ளனர்.

அதில், நடிகர் கமல்ஹாசன், “இந்தியன் -2 படத்திற்கு ஒப்புக்கொள்ள காரணம் இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 3 பாகத்திற்கான கதையையும் இணைத்தே சொன்னார். இந்தியன் - 2 ஜூலை மாதம் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து, அடுத்த 6 மாதம் கழித்து இந்தியன் - 3 திரைப்படமும் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியன் - 2 படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளதையும் உறுதி செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.