வெற்றிமாறன் அமைத்த பாதையில் செல்கிறேன்: சூரி
நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன்.
இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகுமென இன்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சசிகுமார் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
அப்போது, பேசிய நடிகர் சூரி, “விடுதலை திரைப்படத்திற்குப் பின் கதைநாயகனாக நடிப்பதில் ஒரு பயம் இருந்தது. சரியாக இருக்குமா என்கிற பதற்றத்துடன்தான் இருந்தேன். எதுவும் தவறாகி விடக்கூடாது என்பதற்காக இயக்குநர் துரை செந்தில் குமார் படத்தில் நடிக்க விரும்பினேன். மற்ற நகைச்சுவை நடிகர்களைப்போல் பல படங்களில் அடுத்தடுத்து நாயகனாக நடித்திருந்தால், நான் வெற்றிமாறன் அண்ணனுக்கு புதிதாக தெரிந்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன். என் வாழ்க்கை விடுதலைக்கு முன், விடுதலைக்குப் பின் என ஆகிவிட்டது. எனக்குக் கிடைக்கும் விசில் சத்தங்கள் எல்லாம் அவருக்குதான் சொந்தம். விடுதலையின் அனுபவம்தான் கருடனுக்கு உதவியது. என்றும் இதை நான் மறக்க மாட்டேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.