நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கருடன் டிரைலர்!

நடிகர் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :21 மே 2024, 1:22 pm IST

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன்.

இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 

படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகுமென இன்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சண்டைக்காட்சிகளில் சூரியின் நடிப்பு சிறப்பாக இருப்பதால், இப்படமும் அவருக்கு வெற்றியைத் தரும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.