பந்தயம் என்பது அறிவு..! சூரியின் மண்டாடி டிரைலர்!
நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...
மண்டாடி படத்தில் நடிகர் சூரி... - youtube
நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி”. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.
நாகையைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “மண்டாடி” படத்தின் புதுமையான கதைகளம் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள “மண்டாடி” படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (செப். 4) வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதூன் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்துடன், வரும் செப். 10 ஆம் தேதி “மண்டாடி” படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இந்தப் படம் ஐமேஸ் தரத்திலும் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
The trailer for the movie "Mandadi," starring actor Soori as the lead, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





