
மிகுந்த எதிர்பார்ப்பு! நாளை சூரியின் மண்டாடி பட இசை வெளியீடு!
நடிகர் சூரியின் மண்டாடி பட இசை நாளை வெளியாகும் என அறிவிப்பு...

மண்டாடி படத்தில் நடிகர் சூரி
நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் இசை நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை, மாமன் உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி”. இப்படத்தை, அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களயும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், சிறப்பு விடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதூன் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் “மண்டாடி மண்டாடி” பாடலில் இடம்பெற்ற சூரியின் நடனம் பெரும் கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள “மண்டாடி” படத்தின் இசை நாளை (ஆக. 28) வெளியிடப்படும் என படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.
இத்துடன், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி “மண்டாடி” படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
the music for the film "Mandadi," starring actor Soori in the lead role, will be released tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





