புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சிறை, ஹபீபி படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்குக: சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை

சிறை, ஹபீபி திரைப்படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கப்பட வேண்டும் என எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தது குறித்து...

Sirai | Habeebi

சிறை, ஹபீபி படங்களுக்கு சிறந்த விருதுகள்

Published On :

சிறை, ஹபீபி திரைப்படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்எல்ஏ-வுமான தமிமுன் அன்சாரி பேசியதாவது, "தமிழகத்தில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து, விருது வழங்கும் கலாசாரம் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் சிறை மற்றும் ஹபீபி ஆகிய திரைப்படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

சிறை : சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்குள் 5 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக இருக்கும் அப்துல் ரௌஃப் என்பவரை சுற்றிய கதையாக அமைந்திருக்கும் சிறை திரைப்படம், எளிய மக்கள் அதிகாரங்களால் அடக்கப்படும்போது, கிடைக்கும் சிறிய அதிகாரத்தைக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றலாம் என்பதை காட்டியிருக்கும்.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய சிறை படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்கே அக்‌ஷய் குமார்,  அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹபீபி : கடையநல்லூர் பகுதியில் மூன்றாம் தலைமுறையாக நெசவுத் தொழில் மேற்கொண்டு வரும் யூசுப் (கஸ்தூரி ராஜா) மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளே ஹபீபி திரைப்படம்.

பயங்கரவாதிகள் எனும் அடைமொழிகளுக்குள் சிறை வைக்கப்பட்ட மக்களின் மனங்கள் எந்தளவு அன்பு நிறைந்தது என்பதை பேச துணிந்திருப்பது இந்தப் படத்தை கொண்டாடப் போதுமான காரணம்.

Summary

Movies Sirai and Habeebi deserve top awards, says Thamimun Ansari MLA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.