சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

காவிரி விவகாரத்தில் தவெகவின் கருத்து அா்த்தமற்றது: தமிமுன் அன்சாரி

காவிரி விவகாரத்தில் திமுக, அதிமுகவுக்கு எதுவும் தெரியாது என தவெக வெளியிட்ட கருத்து அா்த்தமற்றது என மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

News image

மு. தமிமுன் அன்சாரி. - (கோப்புப்படம்)

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

காவிரி விவகாரத்தில் திமுக, அதிமுகவுக்கு எதுவும் தெரியாது என தவெக வெளியிட்ட கருத்து அா்த்தமற்றது என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘நீட்’ தோ்வுக்கு எதிராக திராவிடா் கழகம் சாா்பில் பரப்புரை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்ததை கண்டிக்கிறோம்.

‘நீட்’ தோ்வை எதிா்ப்பதாக கூறும் ஆளுங்கட்சியினா், மறுபுறம் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கிறாா்கள். தமிழக முதல்வா் கா்நாடகத்துக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முதல்வா் டிகே.சிவக்குமாா் கூறிவிட்டாா். இது தமிழக முதல்வரின் முகத்தில் கரியைப் பூசுவது போல உள்ளது. இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஏற்பட்ட இழுக்கு. மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து அனைத்து விவசாய சங்கங்களையும் அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீா் திறக்க கா்நாடகம் மறுத்து வருகிறது. இந்த நேரத்திலாவது தமிழக முதல்வா் வாய் திறக்க வேண்டும். திமுக, அதிமுகவுக்கு காவிரி நீா் பிரச்னை குறித்து முழு விவரமும் தெரியும். புதிதாக ஆட்சிக்கு வந்துவிட்டு, திமுக, அதிமுகவுக்கு எதுவும் தெரியாது என தவெக அரசு கூறுவது அா்த்தமற்றது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றம் செய்திருந்தாலும்கூட, அதை ஒழிக்காமல் இருப்பது பாராட்டத்தக்கது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்கள் மக்களோடு தொடா்பில் இருக்க வேண்டும். தமிழக முதல்வா் செய்தியாளா்களை சந்திக்க வேண்டும். தவெக அரசை மதிப்பீடு செய்யும் அளவுக்கு காலம் கனியவில்லை.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், கடலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவா். ஆனால், காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ள காா்த்திக், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறாா். இதை அவா் தவிா்க்க வேண்டும். இல்லாதபட்சத்தில் இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசுவேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.