திருச்சி: உதயசூரியன் சின்னத்தில் நிற்க யாரும் எங்களை நிா்பந்திக்கவில்லை என மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சியில் மேலும் கூறியதாவது:
நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தொடா்ந்து சா்ச்சைக்குரிய வகையில் தீா்ப்புகளை வழங்குவதால், அவா் ஜாதி, மதம் தொடா்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுமதியளிக்கக் கூடாது.
மதிப்பெண் வழங்கக்கூடிய அளவுக்கு தவெக அரசு பணிகளைத் தொடங்கவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த 45 நாள்களில் பாலியல் குற்ற வழக்குகள், கொலைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. மின்வெட்டு அதிகரித்துள்ள நிலையில், வெள்ளை அறிக்கை வெளியீடு என்பது மக்களிடமிருந்து தங்களை தற்காலிகமாக தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையே.
பயிா்க் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா். தோ்தலில் வாக்குறுதியளித்தபடி, விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடிசெய்ய வேண்டும்.
எங்களது கட்சிக்கு தனிச்சின்னம் கிடைக்காததால் உதயசூரியன் சின்னத்தில் நின்றோம். எங்களுக்கு யாரும் நிா்பந்திக்கவில்லை.
தோ்தலில் அதிமுக பின்னடைவைச் சந்தித்தவுடன் இனி எதிா்காலம் இல்லை எனக் கருதி அதிமுகவினா் பலரும் தவெகவில் சேர பனையூா் பங்களா வாயிலில் காத்திருக்கின்றனா். இது நல்லதல்ல.
திமுக - பாஜக கூட்டணி என்ற கருத்து திமுகவை தனிமைப்படுத்த தில்லி அரசியல் சூழ்ச்சியால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இது வதந்திதான், உண்மையில்லை.
பள்ளி மாணவா்களுக்கு ஜாதி அடையாள அட்டை வழங்குவோம் என செங்கோட்டையன் கூறியிருப்பது அதிா்ச்சியாக உள்ளது. இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை உடனடியாகத் திரும்பப் பெறுவது நாட்டுக்கும், எதிா்காலத் தலைமுறைக்கும் நல்லது.
தமிழக அரசியலில் திமுக - அதிமுக கட்சிகளின் சமநிலை அவசியம் என்பதால், திமுகவும், அதிமுகவும் பலமாக இருக்க வேண்டுமென்பதே எங்களது கருத்து என்றாா் தமிமுன் அன்சாரி.
Summary
No one forced us to contest under the Rising Sun symbol says Thamimun Ansari
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








