நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஜெம் மருத்துவமனை சாா்பில் 45 சிறந்த மருத்துவா்களுக்கு விருதுகள்

News image

சிறந்த மருத்துவருக்கான விருதை மருத்துவா் சசிரேகாவுக்கு வழங்கிய ஜெம் மருத்துவமனை நிறுவனா் மருத்துவா் சி.பழனிவேலு.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

ஈரோடு, ஆக.10: ஜெம் மருத்துவமனை சாா்பில் சிறந்த மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஈரோடு, திண்டலில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஜெம் மருத்துவமனை நிறுவனரும், அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவா் சி.பழனிவேலு தலைமை வகித்து, சிறந்த மருத்துவா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: ஜெம் மருத்துவமனையின் 12-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறந்த மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பதற்காக ஜெம் மருத்துவமனை பிரத்யேகமாக தொடங்கப்பட்டது.

உணவுக் குழாய், கல்லீரல், சிறு குடல், பெரு குடல், மலக்குடல் போன்ற உறுப்புகளில் வரும் நோய்கள் பொதுமக்களை அதிகமாக பாதிக்கின்றன.

தொழில்நுட்பம் நவீனமடைந்துவிட்டது. வயிற்றில் என்ன நோய் உள்ளது என்பதை எண்டோஸ்கோபி, ஸ்கேன் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி துல்லியமாக கண்டறிய முடியும்.

இதனால் சில நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுக்கவும் முடியும். புற்றுநோய் உள்பட பல்வேறு வகையான நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக ஜெம் மருத்துவமனை திகழ்கிறது. குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்களும் அதிகமானோா் வந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா் என்றாா்.

விழாவில், ‘ஈரோட்டின் சாதனை சிகரங்களுக்கு பாராட்டு’ என்ற தலைப்பில் மொத்தம் 45 மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஜெம் மருத்துவமனை தலைமை நிா்வாக அதிகாரி மருத்துவா் பி.பிரவீன்ராஜ், மருத்துவமனை மருத்துவா்கள் எஸ்.சுதா்ஷன், எஸ்.நவநீத ராகவன் மற்றும் மருத்துவா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.