9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சிறந்த படமாகத் தேர்வான ஆர்டிகிள் 370-க்கு 3 தேசிய விருதுகள்!

ஆர்டிகிள் 370 திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

News image

ஆர்டிகிள் 370

Updated On :18 ஜூலை 2026, 8:06 pm IST

72-வது தேசிய திரைப்பட விருதுகள் ஆர்டிகிள் 370 படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது.

ஆர்டிகிள் 370' என்பது 2024-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு இந்தி அரசியல் அதிரடித் த்ரில்லர் (Political Action Thriller) திரைப்படமாகும்.

2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370) நீக்கப்பட்டது தொடர்பான திரைப்படம் ஆர்டிகிள் 370.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய ஆர்டிகிள் 370 சட்டப்பிரிவை நீக்க மத்திய அரசு திரைமறைவில் மேற்கொண்ட செயல்பாடுகள், பாதுகாப்புப் படையினரின் திட்டமிடல் மற்றும் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது என உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டது.

இயக்குநர் ஆதித்யா சுஹால் ஜம்பாலே இயக்கிய இப்படத்தில் நடிகை யாமி கௌதம் நாயகியாக நடித்திருந்தார். அவரின் கணவர் ஆதித்யா தர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

20 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிபெற்றது.

இந்த நிலையில், 72-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை (யாமி கௌதம்) மற்றும் சிறந்த இசை (சாஷ்வத் சச்தேவ்) என 3 விருதுகளை இப்படம் வென்றுள்ளது.

படம் வெளியான சமயத்தில் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி, இப்படம் பொதுமக்கள் உண்மையான தகவல்களை அறிய உதவும் எனப் பாராட்டிப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக அரசின் அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவாக பிரசார பாணி திரைப்படமாக இது எடுக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

Summary

'Article 370', selected as the Best Film, wins 3 National Awards!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.