சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு வெளியாவது மேலும் ஒரு வாரம் தாமதம்!

72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுவது மேலும் ஒரு வாரத்துக்கும் மேலாக தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

Online applications for National Teachers Awards 2026 open till July 10

Published On :

72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுவது மேலும் ஒரு வாரத்துக்கும் மேலாக தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. வெற்றியாளா்களை இறுதி செய்யும் பணியில் நடுவா் குழு இன்னும் ஈடுபட்டு வருவதே இதற்கு முதன்மைக் காரணம் என கூறப்படுகிறது.

தேசிய திரைப்பட விருதுகள் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அரசு தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘விருதுக்கான வெற்றியாளா்களைத் தோ்வு செய்யும் நடுவா் குழுவின் ஆலோசனைகள் இன்னும் தொடா்ந்து வருகின்றன. குழுவில் உள்ள சில உறுப்பினா்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்ட வேறு சில பணிகள் இருப்பதால், இந்த நடைமுறை முடிவடைய கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாக ஒரு வாரத்துக்கும் மேலாகும். அதுவரை ஊக அடிப்படையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிா்க்க வேண்டும்,‘ என்று கேட்டுக்கொண்டுள்ளன.

72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள், 2024-ஆம் ஆண்டில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் (சிபிஎஃப்சி) சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்தியாவின் மிக உயரிய திரைப்பட விருதாகக் கருதப்படும் இது, சிறந்த திரைப்படம், இயக்கம், நடிப்பு, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் திரைப்படக் கலைஞா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.