பாலியல் வன்கொடுமை, போலியான வாக்குறுதிகள்... துல்கர் சல்மான் பட இயக்குநர் கைது!
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துல்கர் சல்மான் பட இயக்குநர் பவன் சதினேனி மீதான து குறித்து...

தெலுங்கு பட இயக்குநர் பவன் சதினேனி. - படம்: எக்ஸ் / பவன் சதினேனி.
தெலுங்கு பட இயக்குநர் பவன் சதினேனி மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் அடிதடி வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் பவன் சதினேனியைக் கைது செய்த காவல்துறையினர் சஞ்சல்குடா சிறைச்சாலையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இயக்குநர் பவன் சதினேனி 2013ல் பிரேம் இஷ்க் காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கடைசியாக இவரது இயக்கத்தில் 2023ல் தயா என்ற இணையத் தொடர் வெளியானது.
அடுத்ததாக ஆகாஷம்லோ ஒக தாரா என்ற படத்தினை துல்கர் சல்மானை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள்.
இந்த வழக்கு ஆக.7, 2026ல் பதியப்பட்டுள்ளது. இயக்குநரை கைது செய்த காவல்துறையினர் நீதிபதியிடம் சமர்பிக்க, அவரை சஞ்சல்குடா சிறைச்சாலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கு மேலாக இயக்குநர் தன்னுடன் பழகியுள்ளார். தொடக்கத்தில் பொருளாதார ரீதியாக உதவிய இயக்குநர் அந்தப் பெண்ணுக்கு மருத்துவம், வேலை என அனைத்திலும் உதவுவதாக வாக்களித்துள்ளார். அவரது தயாரிப்பில் அந்தப் பெண் இயக்குநராக அறிமுகமாகுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய இயக்குநருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது பின்னர்தான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. அவர் தனக்கு விரைவில் விவாகரத்து நடைபெறுமெனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பழக்கம் நாளடைவில் உடலுறவு வரைக்கும் சென்றுள்ளது. அந்தப் பெண்ணுக்கு உடல் நலப் பிரச்னை இருந்தும் அது வன்கொடுமையாகவும் மாறியுள்ளது. விடியோ காலில் பாலியல் தொல்லை அளிப்பதும் தொடர்ந்திருக்கிறது. திருமணம், வீடு, பட வாய்ப்பு என வாக்குறுதிகளை அளித்து இயக்குநர் ஏமாற்றியுள்ளார்.
பெண்ணின் வீட்டில் கடந்த ஆக.5ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில் இயக்குநர் அந்தப் பெண்ணை உடலுறவின்போது அடித்துள்ளார். அந்தப் பெண்ணின் முகம், கண்கள் எல்லாம் வீங்கியுள்ளன. இதனால் அந்தப் பெண்ணுக்கு முதுகுவலி தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி இயக்குநர் மீது பிஎன்எஸ் 69, 115(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Summary
Tollywood director Pavan Sadineni booked for alleged sexual abuse, sent to judicial custody
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





