எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் சூரியின் மண்டாடி!

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாவது குறித்து...

actor soori

மண்டாடி படத்தில் நடிகர் சூரி

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:17 pm IST

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி”. இந்தப் படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “மண்டாடி” படத்தின் புதுமையான கதைகளம் மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஆகியவை இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் “மண்டாடி” படம் ஐமேக்ஸ் தரத்தில் அந்நிறுவனத்தின் திரைகளிலும் வெளியாகவுள்ளதாக, படக்குழு இன்று (ஆக. 28) அறிவித்துள்ளது.

நடிகர் சூரி நாயகனாக நடித்து ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் முதல் படமான மண்டாடி-யில் நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதூன் ஜெய்சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been announced that the film "Mandadi," starring actor Soori in the lead role, will be released in IMAX.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.