ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

நடிகர் சூரி மீது எதிர்மறைத் தாக்குதல்கள்!

நடிகர் சூரியைத் தாக்கும் பதிவுகள் குறித்து....

நடிகர் சூரி

Published On :

நடிகர் சூரியின் மீது தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

நடிகர் சூரி மண்டாடி திரைப்படத்திற்குப் பின் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகனாக வளர்ந்துள்ளார். சூரியின் மீதான நகைச்சுவை முகங்கள் மாறி தற்போது முன்னணி நாயகன் என்கிற பிம்பம் பரவலாக நிலைத்திருப்பதால் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதே நேரம், ஒருவர் வளரும்போது எதிர்மறையான விஷயங்களும் அவரை நோக்கி வந்துவிடுகின்றன. இதில், நடிகர் சூரியும் விதிவிலக்காக இல்லாமல் பலரிடமிருந்து தாக்குதல்களைச் சந்தித்து வருகிறார்.

சிலர், மண்டாடி திரைப்படத்திற்குப் பின் சூரியின் பேச்சில் ஆணவம் எட்டிப்பார்க்கிறது என அவர் கோபப்படும் விடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அண்மையில், தொப்பாளர் கேட்ட கேள்விக்கு சூர்யா கோபமாகப் பதிலளித்திருந்தார். ஆனால், தொகுப்பாளர் வேண்டுமென்றே கேள்வியைக் கேட்டதால்தான் சூரி ஆத்திரமானார் என சிலர் சூரிக்கு ஆதரவாக இருந்தனர்.

இப்போது, கூடுதல் விஷயமாக சூரி உரிமையாளராக இருக்கும் மதுரை அம்மன் மெஸ் ஹோட்டல்களில் அதிக விலைக்கு உணவை விற்பதாக அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வளவு நாள் இல்லாத இதுபோன்ற கடுமையான தாக்குதல்கள் மண்டாடியின் வெற்றியைத் தொடர்ந்து நடந்திருப்பது சந்தேகங்களையும் கிளப்பியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Actor Soori continues to face negative criticism.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.