சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மண்டாடி - ஓடிடியில் இந்திய அளவில் முதலிடம்!

மண்டாடி திரைப்படம் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது...

actor soori

நடிகர் சூரி - படம்: எக்ஸ்

Updated On :

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் சூரியின் நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பிடித்தது.

சூரியுடன் நடிகர்கள் சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பும் பேசப்பட்டது. கடலோடிகளின் வாழ்க்கையுடன் படக்குப்போட்டிகளைக் காட்சிப்படுத்திய விதத்தாலும் விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில், மண்டாடி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு முன், நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Actor Soori's film Mandaadi has been released on an OTT platform and is garnering the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.