5 தசாப்தங்கள்... இப்போதும்... ஆர்ஜே பாலாஜி பதிவு!
ஆர்ஜே பாலாஜியின் ஜெயிலர் - 2 பதிவு...

நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, ரஜினிகாந்த்
நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜெயிலர் - 2 திரைப்படம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் ஆர்வம் காரணமாக தென்னிந்திய அளவில் இப்படத்திற்கு பெரிய வணிகம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.
மேலும், இப்படத்திற்கு சராசரிக்கும் மேல் என்கிற விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “5 தசாப்தங்கள்... தலைவர் திரைப்படம் வெளியானால் இப்போதும் அதே உணர்வைத் தருகிறது. சூப்பர் ஸ்டார்...!” எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களும் ஜெயிலர் - 2 திரைப்படத்தைப் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Actor RJ Balaji has posted about the film Jailer 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

