
கருப்புக்குப் பின்... மண்டாடி அதிகாரப்பூர்வ வசூல்!
மண்டாடி வசூல் அறிவிப்பு...

நடிகர் சூரி
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மண்டாடி படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால், இந்தத் திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கப்பட்டன.
நல்ல கதைக்களங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக மண்டாடிக்கு அசத்தலான வணிகம் நடைபெற்று வருகிறது. தற்போது, திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்ததுடன் 4-வது வாரத்திலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படம் உலக அளவில் ரூ. 150 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டில் கருப்பு திரைப்படத்திற்குப் பின் தமிழகத்திலேயே ரூ. 100 கோடியை வசூலித்த திரைப்படமாக மண்டாடி மாறியுள்ளது.
The box office collection of actor Soori's film Mandaadi has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







