பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

3-வது வாரத்திலும் ஹவுஸ்ஃபுல்... பிளாக்பஸ்டர் மண்டாடி!

மண்டாடி திரைப்படம் தற்போது வரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...

Published On :

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் அசத்தலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரித்தன.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவானது.

இப்படத்தில் இடம்பெற்ற படகுப்போட்டி காட்சிகள் ஆச்சரியப்படும்படி எடுக்கப்பட்டதால் ரசிகர்களின் விருப்பமான படமாக மாண்டாடி மாறியது.

இந்த நிலையில், இப்படம் 3-வது வாரத்திலும் பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ரூ. 125 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம் இன்னும் சில நாள்களில் ரூ. 150 கோடியை எட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப்படங்களில் பெரிய வெற்றியைப் பெற்ற கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் மண்டாடியே இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூரியின் முதல் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Actor Soori's film Mandaadi is receiving a fantastic reception.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.