தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

வியக்க வைக்கும் சூரியின் மண்டாடி வசூல்!

மண்டாடி வசூல் அறிவிப்பு...

Published On :

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரித்தன.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவானது.

இப்படத்தில் இடம்பெற்ற படகுப்போட்டி காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Story image

இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ. 65 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சூரியின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக மாறியுள்ளதால் அவருக்கான வணிகமும் இப்படம் மூலம் அதிகரித்துள்ளது.

The official box office figures for actor Soori's film Mandaadi have been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.