தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

பந்தயக் காரில் அஜித்துடன் சென்ற விடியோவை பகிர்ந்த முதல்வர் விஜய்!

நடிகர் அஜித் கார் ஓட்டிய அழகை ரசித்த முதல்வர் விஜய்...

காரை ஓட்டும் நடிகர் அஜித் அருகே முதல்வர் விஜய்.

Published On :

முதல்வர் விஜய் நடிகர் அஜித்துடன் பந்தயக் காரில் சென்ற விடியோவை பகிர்ந்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு, லண்டனில் நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்ற லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இருவரும் பொதுவெளியில் நீண்ட காலம் கழித்துச் சந்தித்துக் கொள்வதால் ஐரோப்பிலிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஜித் - விஜய்யைக் காண திரண்டனர்.

முதல்முறையாக கார் பந்தயத்தைக் காண இவ்வளவு பேர் வந்ததும் நிர்வாக அமைப்புக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையில், கார் பந்தயம் முடிந்ததும் முதல்வர் விஜய் நடிகர் அஜித்துடன் பந்தயக் காரில் சென்றார். அஜித் ஓட்ட, அருகே தான் அமர்ந்து வேகமாக பந்தயச் சாலையில் சென்று வந்ததை முதல்வர் விஜய் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். காரில் செல்லும்போது ரேஸர் உடையை இருவரும் அணிந்திருந்தது ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

Chief Minister Vijay has shared a video of himself riding in a race car with actor Ajith.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.