பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

முதல்வர் விஜய்யுடன் கைகோர்த்துச் சென்ற பாட்டி! விஜய் கொடுத்த கண்ணாடி விலை இவ்வளவா?

விவசாயி ஒருவருடைய வீட்டுக்கு முதல்வர் விஜய் சென்ற போது, அவரை வழியனுப்ப வந்த பாட்டி விஜய்யுடன் கைகோர்த்துக் கொண்டு வந்தது பற்றி..

முதல்வர் விஜய்யுடன் கைகோர்த்துச் சென்ற பாட்டி

முதல்வர் விஜய்யுடன் கைகோர்த்துச் சென்ற பாட்டி - from video grab

Published On :

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம் திரும்பும் வழியில், சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடினார்.

சின்னக்காவூர் பகுதியில் முதல்வர் விஜய்யை வரவேற்கக் காத்திருந்த மக்களை சந்தித்துப் பேசிய விஜய், அங்கிருந்த விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார்.

முதல்வர் விஜய் வருகையால் அப்பகுதியே பெரும் பரபரப்பை அடைந்தது. முதல்வரை வரவேற்ற விவசாய குடும்பத்தினருக்கு, விஜய் பட்டு வேட்டி, சேலைகளை வழங்கினார்.

எந்தவிதமான விவசாயம் செய்கிறீர்கள், எவ்வாறு வருவாய் ஈட்டுகிறீர்கள் என்பது குறித்து விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுள்ளார். அதற்கு, வீட்டுக்கு பின்னால் வாழை மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம், அது ஒன்றே வாழ்வாதாரம் என்று கூறியிருக்கிறார்கள் விவசாய குடும்பத்தினர். மேலும் தங்களுக்கு வேறென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்தும் விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

Story image

பிறகு, விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி முதல்வர் விஜய்யை வழியனுப்ப அவருடன் கைகோர்த்தபடி வந்தார். அவருக்கு பிரியாவிடை கொடுத்த முதல்வர் விஜய், தான் அணிந்திருந்த விலை மதிப்பு மிக்க கண்ணாடியை பாட்டிக்கு அணிவித்து மகிழ்ந்தார். சில சமூக ஊடகங்களில் அந்தக் கண்ணாடி விலை ரூ.1 லட்சம் என்றும், சில பதிவுகளில் ரூ.1.50 லட்சம் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன.

விவசாயி வீட்டிலிருந்து ஒன்றாக கைகோர்த்தபடி வந்த போது, அங்குக் கூடியிருந்த மக்களுக்கு விஜய் கையசைத்ததோடு, பாட்டியையும் கையசைக்குமாறு கூறினார். உடனே பாட்டியும் முதல்வருடன் இணைந்து மக்களைப் பார்த்து கையசைத்ததைப் பார்த்த மக்கள் புன்னகையுடன் விஜய்க்கு கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதல்வர் விஜய் அணிந்திருந்த கண்ணாடியை போட்டுக் கொண்டதும், பாட்டிக்கு மகிழ்ச்சியும் வெட்கமும் அதிகரித்தது. அந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

முதல்வர் விஜய் அணிந்திருந்த கண்ணாடி என்பதால், அக்கம் பக்கம் வீட்டில் உள்ள இளைஞர்கள், அந்த பாட்டியைப் பார்த்து ஒரு பக்கம் பொறாமை பட்டனர். பிறகு நெருங்கி வந்து கண்ணாடியை தாங்கள் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பிறகு, சேலம் விமான நிலையம் செல்லும் வழியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த மற்ற பெண்களிடமும் முதல்வர் விஜய் பேசி அங்குள்ள நிலைமை மற்றும் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

Summary

The elderly woman who walked hand-in-hand with Chief Minister Vijay! Just how much did the glasses Vijay gave her cost?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.